தீபாவளி சிறப்பு பூப்பந்து சுற்றுப்போட்டி-2011(KSC & VCC)

posted Mar 7, 2013, 9:07 PM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகம் வருடாவருடம் தீபாவளி தினத்தை சிறப்பிக்கும் வகையில் கழக உள்ளக அரங்கிலே பூப்பந்து சுற்றுத்தொடரினை கழக வீரர்களுக்கிடையே நடாத்துவது வழமை அவ்வாறே இம்முறையூம் சற்றுவித்தியாசமாக ஏனைய கழகங்களையூம் இணைத்து வெகு சிறப்பாக  சுற்றுத்தொடரை VCC அரங்கிலே நடாத்தியது.இதன் இறுதிப்போட்டிகள் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்றது.இறுதி ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளிலும் காரைதீவூ விளையாட்டுக் கழகமே சம்பியன் பட்டத்தை சுவீகரித்துக்கொண்டது.இன் நிகழ்வூகளுக்கு பிரதமஅதிதியாக கழகத்தின் கௌரவ போசகரும் உத்தரவூ பெற்ற நிலஅளவையாளரும் நீதிமன்ற ஆணையாளருமான திருV.இராஜேந்திரம் அவர்கள் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் போட்டியின் தீர்ப்பாளராகவூம் கடமையாற்றி சிறப்பித்தார்.


Comments