RUNNERS UPகிண்ணத்தை சுவீகரித்தது காரைதீவூ விளையாட்டுக் கழகம்

posted Mar 4, 2013, 11:04 PM by Sulecshan Logaraju
சாய்ந்தமருது மண்ணின் பழம்பெரும் விளையாட்டுக் கழகங்களுள் ஒன்றான மியண்டாட் விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு 20 ஓவர்கள் கொண்ட முக்கோண சுற்றுத்தொடரின் இறுதியாட்டம் நேற்று சாய்ந்தமருது மைதானத்தில் மிகவூம் விறுவிறுப்பாக நடைபெற்றது.இதில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப்ரேங் அணியினர் 149 ஓட்டங்களை வெற்றி இலக்காக காரைதீவூ விளையாட்டுக் கழகத்திற்கு நிர்ணயிக்க சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய காரைதீவூ விளையாட்டுக் கழகம் மூத்தவீரர் சுரேஸ் மற்றும் அதிரடி இடதுகை துடுப்பாட்ட விரர் துஸ்யந்தன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி இலக்கை நெருங்கிய போதிலும் இறுதித் தறுவாயில் விக்கட்டுகள் வேகமாக வீழ்த்தப்பட்டதால் வெறும் இரண்டு ஓட்டங்களால் தோல்வியூற்று Runners up கிண்ணத்தை சுவீகரித்தனர்.





Comments