புலமைப்பரிசில் இலவச கல்விக் கருத்தரங்கு - KSC

posted Mar 5, 2013, 8:05 PM by Sulecshan Logaraju
காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக இலவச முன்னோடி பரீட்சையூம் கருத்தரங்கும் அமரர்.பத்மநாதன் ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.இதற்கு கழகத்தின் நிருவாகசபை உறுப்பினரும் மொனராகலை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளருமான திரு.அ.லிங்கேஸ்வரன் அவர்கள் தலமை வகித்தார்.கருத்தரங்கின் நிறைவில் கழக தலைவர் திரு.ஏ.அமிர்தானந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் முதல் 12 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதில் அதிகூடிய புள்ளியை செல்வன்.தட்சணாமூர்த்தி யதுர்சன் 
பெற்றுக்கொண்டார்.

Comments