KSC & VCC வருடாந்த கலாசார விளையாட்டு விழா.

posted Mar 5, 2013, 7:49 PM by Sulecshan Logaraju
காரைதீவு விளையாட்டுக்கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூக நிலையம் என்பன சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நடாத்தும் வருடாந்த கலாசார விளையாட்டு விழா இலங்கை நேரப்படி சரியாக பி.ப 2.30 (GMT 09:00) க்கு காரைதீவு கனகரெட்ணம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாக இருக்கின்றது.. இந்நிகழ்வை எமது புலம்பெயர் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க karaitivu.org இனூடு நேரடி ஒளி,ஒலி பரப்பு செய்வதற்காக எமது இணையக்குழுவினர் மைதானத்தில் குழுமியுள்ளனர். எனவே இவ்விளையாட்டு போட்டி நிகழ்வை எமது இணையத்தளத்தினுடாக, தொடங்கும் நேரத்தில் இருந்து நேரடியாக கண்டுகளிக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இத் தகவலை நேரடியாக வந்து பார்வையிடமுடியாத சக உறவுகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Comments