காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

posted Mar 3, 2009, 1:48 AM by Suranuthan Sothiswaran   [ updated Mar 3, 2009, 2:16 AM ]
வருடா வருடம் காரைதீவு விளையாட்டுக் கழகம் மகாசிவராத்திரியை முன்னிட்டு மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளை ஏற்பாடு செய்வது வழமை. அந்தவகையில் இம் முறையும் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது. இதற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ஜெகராஐன் அவர்களும் சிறப்பு அதிதியாக கழகத்தின் கௌரவ போசகர் திரு.வி.இராஜேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.இதன் போது உரையாற்றிய உதவி பிரதேச செயலாளர் காரைதீவு விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் சிறந்த போட்டி ஏற்பாடுகள் பற்றியும் செயற்றிறன் பற்றியும் மெச்சி பேசினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த கௌரவ போசகர் யார் யார் வரவில்லை இல்லை என்ற கவலைகளை விட்டு இருக்கும் ஓவ்வொருவரும் திறன்பட செயல்படும்பட்சத்தில் எவ்வாறான சவால்களையும் வெல்ல முடியும் இதற்கு நல்ல அனுபவம் எமக்கு உண்டு என்றார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த கழக தலைவர் திரு.ச.நந்தகுமார் இவ்வாறான தமது உள்ளக அரங்கிலே போட்டியை நடத்தக் கூடிய தகுதி கிழக்கிலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில கழகங்களுக்கே உண்டு எனவே இவ்வாறானதொரு பாரிய நிலப்பரப்பை உருவாக்க அயராது உழைத்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.தொடர்ந்து வெற்றி பெற்ற அணியினருக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.தொடர்ந்து செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.


தகவல் .தி. லாவண்ணியன்

Comments