காரைதீவூ விளையாட்டுக் கழகம் 20-20 சுற்றுத்தொடரின் அரையிறுதிக்கு தகுதி

posted Mar 25, 2013, 2:55 AM by Sulecshan Logaraju   [ updated Oct 5, 2016, 9:45 AM by Shathyajith Nadesalingam ]

மட்டு/கல்லாறு விளையாட்டுக் கழகம் மட்டு ,அம்பாரை மாவட்டங்களை பிரதிநிதிக்துவப்படுத்தும் வகையில் 24 முன்னணி விளையாட்டுக் கழகங்களை இணைத்து நடாத்தி வந்த மாபெரும் 20-20 கடினபந்து சுற்றுத்தொடரின் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மட்டு /கல்லாறு விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த காரைதீவூ விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கான தகுதியை பெற்றுக்கொண்டது.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய KSC ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலீபதாஸின் அதிரடியான 105(59) ஓட்டங்களின் உதவியோடு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.187 ஒட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய மட்டு/கல்லாறு அணியினர் காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் வேகபந்து வீச்சை சமாளிக்க தவறி தமது விக்கெட்டுக்களை இழந்தனர் இறுதியில் 15.4 ஓவர்களில் வெறும் 99 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கட்டுக்களையூம் இழந்தனர்.இதில் KSC ன் ஆரம்ப பந்து வீச்சாளர் விஜயகரன் 19ஓட்டங்களுக்கு 4 விக்கட்டக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
Comments