இலவச நடமாடும் மருத்துவ முகாம்

posted Mar 5, 2013, 1:41 AM by Sulecshan Logaraju

ஆய்வூக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனத்தின் உதவியூடன் காரைதீவூ விளையாட்டுக் கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் நடமாடும் மருத்துவ முகாமானது எதிர்வரும் 07.11.2010ம் திகதி காலை 8.30 மணிமுதல் பி.ப 5.00 மணிவரை காரைதீவூ விளையாட்டுகழகத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இம் முகாமில் பயன்பெற  விரும்பும் நோயாளர்கள் முன்கூட்டியே தங்களை  பதிவூ செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேம்.இம் முகாமில் குருதிப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை, நீரிழிவூ நோய்பற்றிய விளக்கம் உள்ளிட்ட ஏனைய பல மருத்துவப் பரிசோதனைகள் தரமான மருந்துகள் யாவூம் முற்றிலும் இலவசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் பதிவூ செய்து கொள்பவர்கள் நுழைவூப்பணமாக ரூபாய் 20 ஐ காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் தலைமையகத்தில் 06.11.2010 முன்பாக செலுத்தி இறுதிநேர நெருக்கடிகளை தவிர்த்து தங்களை பதிவூ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றௌம்.
Comments