சிவராத்திரி சிறப்பு சினேகபூர்வ 20-20 கிரிக்கற் போட்டி

posted Mar 7, 2013, 9:37 PM by Sulecshan Logaraju
சிவராத்திரி தினத்தை சிறப்பிக்கும் முகமாக இரு தமிழ் கடினபந்து கழகங்களான காரைதீவூ விளையாட்டுக்கழகம் மற்றும் மட்டு கல்லாறு விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ 20-20 கிரிக்கற் போட்டி ஒன்று கனகரட்ணம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய கல்லாறு அணியினர் வெறும் 93 ஓட்டங்களை  பெற்று தமது சகல விக்கட்டுகளையூம் இழந்தனர்.94 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலாடிய KSC  ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலிபதாஸின் அதிரடியான 70 ஓட்டங்களின் உதவியோடு 9 விக்கட்டுகளால் வெற்றியீட்டினர்.

Comments