சம்பியன் பட்டத்தை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியது காரைதீவு விளையாட்டுக் கழகம்

posted Mar 16, 2009, 9:31 PM by Suranuthan Sothiswaran
காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்து அணிகளிடையில் கடந்த அரை தசாப்த காலமாக தோற்கடிக்கப்பட முடியாத அணியாக திகழ்ந்து வரும் காரைதீவு விளையாட்டுக் கழக கரப்பந்து அணியினர் நேற்றைய தினம் நடைபெற்ற இந்த வருடத்திற்கான பிரதேச செயலக மட்டத்திலான போட்டியிலும் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை மீண்டுமொரு முறை உறுதிப்படுத்திக் கொண்டனர்.
இதன் போது இறுதிப்போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடியமை குறிப்பிடத்தக்கது.


தகவல் -லாவண்ணியன்

Comments