செய்திகள்


சுதந்திரதின ஆட்டத்தில் வெற்றிவாகை சூடிய KSC......

posted Feb 4, 2017, 5:35 AM by Shathyajith Nadesalingam

89வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சாய்ந்தமருது ஹெலஜன்ஸ் அணியின் 8வது ஆண்டு நிலைவை முன்னிட்டு நடாத்திய அணிக்கு 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து சுற்றுப்போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் 105 ஒட்டங்களால் வெற்றிவாகை சுடியது. இதில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பொலிஸ்நிலய பொறுப்பதிகாரியும் இளைஞர்பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் பல அதிதிகளும்கலந்து சிறப்பித்தனர். இதில் விதுர்ஷன் 65 ஓட்டங்களை பெற்று ஆட்டநாயகன்விருதை வென்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவூ விளையாட்டுக் கழகம் 20-20 சுற்றுத்தொடரின் அரையிறுதிக்கு தகுதி

posted Mar 25, 2013, 2:55 AM by Sulecshan Logaraju   [ updated Oct 5, 2016, 9:45 AM by Shathyajith Nadesalingam ]


மட்டு/கல்லாறு விளையாட்டுக் கழகம் மட்டு ,அம்பாரை மாவட்டங்களை பிரதிநிதிக்துவப்படுத்தும் வகையில் 24 முன்னணி விளையாட்டுக் கழகங்களை இணைத்து நடாத்தி வந்த மாபெரும் 20-20 கடினபந்து சுற்றுத்தொடரின் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மட்டு /கல்லாறு விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்த காரைதீவூ விளையாட்டுக் கழகம் அரையிறுதிக்கான தகுதியை பெற்றுக்கொண்டது.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய KSC ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திலீபதாஸின் அதிரடியான 105(59) ஓட்டங்களின் உதவியோடு 186 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.187 ஒட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய மட்டு/கல்லாறு அணியினர் காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் வேகபந்து வீச்சை சமாளிக்க தவறி தமது விக்கெட்டுக்களை இழந்தனர் இறுதியில் 15.4 ஓவர்களில் வெறும் 99 ஓட்டங்களுக்கு தமது சகல விக்கட்டுக்களையூம் இழந்தனர்.இதில் KSC ன் ஆரம்ப பந்து வீச்சாளர் விஜயகரன் 19ஓட்டங்களுக்கு 4 விக்கட்டக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கருத்தரங்கு

posted Mar 25, 2013, 2:52 AM by Sulecshan Logaraju

காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான கருத்தரங்கானது   இ.கி.ச பெண்கள் பா டசாலையில் திரு.சரா.புவனேஸ்வரன் (விரிவுரையாளர்-கோப்பாய் ஆசிரியர் கலாசாலை) அவர்களால் நடாத்தப்பட்டது

SPECIAL SEMINAR FOR YEAR-5 STUDENT'S PARENTS IN KARAITIVU

posted Mar 7, 2013, 9:44 PM by Sulecshan Logaraju


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் காரைதீவு மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கை காரைதீவு விளையாட்டுக் கழகம் காரைதீவு  பெண்கள் பாடசாலையில் நடாத்தியது. யாழ் பிரபல ஆசிரியரும் தமிழர்ஆசிரியர் சங்கப்  பொதுச்செயலாளருமான  சரா.புவனேஸ்வரன் விளக்கமளிப்பதையும்  கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

வருடாந்த கலாச்சார விளையாட்டு விழா - 2012

posted Mar 7, 2013, 9:40 PM by Sulecshan Logaraju


உங்கள் கழகமாம் காரைதீவூ விளையாட்டுக் கழகம் வருடாவருடம் சித்திரை வருடப்பிறப்பினை சிறப்பிக்கும் முகமாக மிகவூம் கோலாகலமாக நடாத்திவரும் வருடாந்த கலாச்சார விளையாட்டு விழா நிகழ்வூகள் இம் முறை எதிர்வரும் 14.04.2012(சனிக்கிழமை) கனகரட்ணம் விளையாட்டரங்கிலே வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியூள்ளது. எனவே அன்று அனைவரையூம் அன்போடு காரைதீவூ கனகரட்ணம் அரங்கிற்கு அழைக்கின்றௌம்.

இவ்வண்ணம்
காரைதீவூ விளையாட்டு கழகமும் விபுலானந்தா சனசமூக நிலையமும்  

சிவராத்திரி சிறப்பு சினேகபூர்வ 20-20 கிரிக்கற் போட்டி

posted Mar 7, 2013, 9:37 PM by Sulecshan Logaraju

சிவராத்திரி தினத்தை சிறப்பிக்கும் முகமாக இரு தமிழ் கடினபந்து கழகங்களான காரைதீவூ விளையாட்டுக்கழகம் மற்றும் மட்டு கல்லாறு விளையாட்டுக் கழக அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ 20-20 கிரிக்கற் போட்டி ஒன்று கனகரட்ணம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.முதலில் துடுப்பெடுத்தாடிய கல்லாறு அணியினர் வெறும் 93 ஓட்டங்களை  பெற்று தமது சகல விக்கட்டுகளையூம் இழந்தனர்.94 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலாடிய KSC  ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலிபதாஸின் அதிரடியான 70 ஓட்டங்களின் உதவியோடு 9 விக்கட்டுகளால் வெற்றியீட்டினர்.

வருடாந்த சிவராத்திரி மின்ணொளி கரப்பந்து சுற்றுப்போட்டி

posted Mar 7, 2013, 9:33 PM by Sulecshan Logaraju

காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த சிவராத்திரி மின்ணொளி சினேகபூர்வ கரப்பந்து சுற்றுப்போட்டி சிவராத்திரி தினமான நேற்று கழக உள்ளக அரங்கிலே வெகு கோலாகலமாக நடைபெற்றது.இதன் போதான காட்சிகள்.

KSC Honours former DS Mr.S.Ramakrishnan

posted Mar 7, 2013, 9:28 PM by Sulecshan Logaraju

Karaitivu Sports Club has honoured  Vipulamaamani.Mr.S.Ramakrishnan (Rtd Divisional Secretary) , who has rendered a yeoman's service to the uplift of our village.சிரமதான நிகழ்வு-காரைதீவு ஶ்ரீ நந்தவன பிள்ளையார் ஆலயம்.

posted Mar 7, 2013, 9:25 PM by Sulecshan Logaraju

காரைதீவு ஶ்ரீ நந்தவன பிள்ளையார் ஆலயத்தில் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள   கும்பாபிஷேக                                 நிகழ்வையொட்டி காரைதீவு விளையாட்டுக்கழகம் அங்கு சிரமதான நிகழ்வை இன்று ஏற்பாடு செய்திருந்தது.                                               அதன்போது எடுக்கப்பட்ட சில படங்கள்.

Miyandad Junior Trophy - 2011(Final Result)

posted Mar 7, 2013, 9:18 PM by Sulecshan Logaraju   [ updated Mar 7, 2013, 9:20 PM ]

Miyandad Junior Trophy - 2011ன் இறுதி போட்டி 01.01.2012 அதாவது நேற்று காரைதீவூ கனகரட்ணம்   விளையாட்டரங்கில்விறுவிறுப்பாக நடைபெற்றது.இதில் சாய்ந்தமருது மியண்டாட் அணியை   தோற்கடித்த காரைதீவூ விளையாட்டுக்கழகம்சம்பியன் மகுடத்தை பெற்றுக்கொண்டது.அத்தோடு   இன் நிகழ்வூகளின் போது பல காலம் அரசசேவையாற்றி ஓய்வூபெறஇருக்கின்ற பிரதேச    செயலாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன் ஜயா அவர்களும் மியண்டாட் கழக நிர்வாகத்தால்   பாராட்டிகௌரவிக்கப்பட்டார்.

1-10 of 73